புதிய நீதியரசர்கள் நியமனம்.

uthavum karangal

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான
நீதியரசர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நியமனங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று மாலை
வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்றத்துக்கு ஆறு நீதியரசர்களுக்கான நியமனங்கள் இன்று
வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு 14 நீதியரசர்கள் ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் அர்ஜுன அபேசேகர
நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்