...
செய்திகள்

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எல்.எம்.டி. தர்மசேன இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பெலவத்தவிலுள்ள பரீட்சைகள் திணைக்கள வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் புதிய ஆணையாளர் நாயகம் இன்று காலை கடமைகளை ஆரம்பித்தார்.

கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராக இருந்த எல்.எம்.டி. தர்மசேன, கொழும்பில் உள்ள ஆனந்த மற்றும் மஹாநாம கல்லூரிகளின் அதிபராகவும், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen