அரசியல்
புதிய பிரதமரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
கொழும்பு விஜயராம வீதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (30) காலை குறித்த சந்திப்பு நடைபெற்றதாகக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் மாத்திரமே இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் நாடாளுமன்றக் குழு இன்று கூடுகின்றதுடன், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கபடுகின்றதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.