செய்திகள்

புதிய மதுபானங்களுக்கு தடை..

கலால்வரித் திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டாத வெளிநாட்டு மதுபானங்களை நாட்டில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய ஸ்டிக்கர்களை ஒட்டாது இறக்குமதி செய்யப்படும் மதுபான வகைகளை வைத்திருத்தல்,
களஞ்சியப்படுத்துதல்,மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சு கூறியுள்ளது.

23 நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு மதுபானங்களை இறக்குமதி செய்கின்றமைகுறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்டத்தினூடாக,சட்டவிரோதமாக வெளி நாட்டிலிருந்து மதுபானங்களை கொண்டுவருவதற்கும், தரமற்ற மதுபானங்களை பயன்படுத்தலையும் தடுக்க முடியும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கலால்வரித் திணைக்களத்திற்கு 66 பில்லியன் ரூபா வருமானம்
கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது .

Related Articles

Back to top button
image download