செய்திகள்

புதிய வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம்.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ், இலங்கையிலும் பரவக்கூடிய
அபாயமுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய வகை தொற்றானது நாட்டிற்குள் பரவுக்கூடிய சந்தர்ப்பம் மிக அதிகளவில்
காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவில் 60 வீதமானோர் புதிய வகை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளைத் தவிர ஆசிய நாடுகளிலும் புதிய கொரோனா தொற்று பரவியுள்ளதாக
சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சிங்கப்பூரிலும் புதிதாக
நோயாளர்கள் அடையாளங் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

எனவே புதிய வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட
வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button