சினிமா

புதிய ஸ்டூடியோவில் பாடல் ஒலிப்பதிவு செய்யும் இளையராஜா

பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்திற்கு பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டுடியோவில் தனது முதல் பாடலை ஒளிப்பதிவு செய்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டரில் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ இன்று திறக்கப்படுகிறது.

வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றப்பட்டதால் புதிய ஸ்டுடியோவை உருவாக்கியுள்ள இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் தான் பல ஆண்டுகளாக தனது படத்திற்கான இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button