உலகம்செய்திகள்

புதுடெல்லியில் இன்று முதல் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு.!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்று முதல் கொவிட் கட்டுப்பாடுகள் பகுதியளவில் தளர்த்தப்படுகின்றன. அதன்படி வர்த்தகநிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றம் உணவகங்களை இன்று முதல் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களை வாரத்தின் 07 நாட்களும், ஒற்றை இரட்டை இலக்க முறைக்கமையத் திறக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இல்லாதளவிற்கு, கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததால் இந்தத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் வாரமொன்றுக்கான பரீட்சார்த்த நடவடிக்கையே இதுவெனவும், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமிடத்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். உணவகங்களில் ஆசன எண்ணிக்கையின் 50 வீதமானவர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button