மலையகம்
புது வருடத்தில் சிறுத்தை தாக்குதல் ஹட்டன் பன் மூரில் சம்பவம்
ஹட்டன் பன்முர் தோட்டத்தில் கொடி சிறுத்தையால் தாக்கப்பட்டு 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை 12.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. தேயிலை மலையில் பதுங்கி இருந்த சிறுத்தை நான்கு ஆண் தொழிலார்களையும் ஒரு பெண் தொழிலாளியையும் தாக்கியதன் காரணமாக தற்போது அவர்கள் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் மேலதிக சிகிச்சையாக இருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.மேலும் சிறுத்தையை பிடிக்க வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது .