...
செய்திகள்

புத்தளத்தில் சில வீதிகள் நீரில் மூழ்கின!

கடும் மழையுடனான காலநிலை காரணமாக புத்தளம் பகுதியில் உள்ள சில வீதிகள் சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, புத்தளம் – குருணாகல் வீதி அரலிய உயன, 2 ஆம் கட்டை, தம்பப்பண்ணி ஆகிய பிரதேசங்களில் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி வீதிகள் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்வீதியை பயன்படுத்துபவர்கள் மாற்றுவீதிகளில் பயணிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது

Related Articles

Back to top button


Thubinail image
Screen