செய்திகள்

புத்தளத்தில் புதைக்கப்பட்ட 56 வயதுடைய நபரின் சடலம் மீண்டும் தோண்டி எடுப்பு.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி புத்தளம் வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட 56 வயதுடைய ஒருவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் இந்த சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

புத்தளம் வேப்பமடுவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நிஸ்தார் என்பவரின் சடலமே இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை 4 ஆம் திகதி தனது வீட்டில் காலமான குறித்த நபர், அன்றைய தினமே வேப்பமடு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
எனினும், குறித்த நபர் உயிரிழந்து இரண்டு நாட்களின் பின்னர் 6ஆம் திகதி திங்கட்கிழமை காலை அவரது 51 வயது மனைவி அவரது 3 வயது மகள் ஆகியோர் திங்கட்கிழமை நண்பகல் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ஒரேநாளில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரினதும் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனையில் அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரது சடலங்கள் கடந்த புதன்கிழமை (08) புத்தளத்திலிருந்து ஓட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், மனைவிக்கும், மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால், ஒரே வீட்டில் இருந்து முதலாவதாக கடந்த 4ம் திகதி உயிரிழந்த முஹம்மட் நிஸ்தார் (வயது 56) என்பவருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக சுகாதார பிரிவினர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், வேப்பமடு பகுதியிலுள்ள முஸ்லிம் மையவாடியில் அடச்சம் செய்யப்பட்ட முஹம்மட் நிஸ்தார் என்பவரின் சடலத்தை தோண்டியெடுத்து, பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு புத்தளம் பொலிஸார், புத்தளம் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த நபருடைய ஜனாஸா புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான் அசேல டி சில்வா முன்னிலையில் நேற்று (10) காலை தோண்டி எடுக்கப்பட்டது.

Related Articles

Back to top button
image download