செய்திகள்

புத்தளத்தில் மீனவர் பலி.

புத்தளம் – முந்தல் பள்ளிவாசல்பாடு பகுதியில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது நேற்று மாலை மீனவர் ஒருவர் காணாமல் போய்யிருந்தார்.

காணாமல் போன மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீர்கொழும்பை சேர்ந்த 55 வயதான மீனவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button