செய்திகள்

புத்தளத்தில் யானையின் உடல் கண்டுபிடிப்பு

புத்தளம் எலுவாங்குளம் இரால்மடு பகுதியில் யானையொன்றின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்துள்ளனர்.

மின்சார வேலியில் சிக்குண்டு குறித்த யானை உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இன்றைய தினம் உடலை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download