சமூகம்

புத்தளம் – அனுராதபுரம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி! 5பேர் காயம்

விமான படைக்குச் சொந்தமான டிபெண்டர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று புத்தளம் – அனுராதபுரம் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதி சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் அனுராதபுரம் தலாவ பிரதேசத்தை ​சேர்ந்த 28 வயதுடைய விமானப்படை வீரர் என தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

69 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button