...
செய்திகள்

புத்தளம் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்

 
அருள் தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் காளியம்மா
அனைத்துலக நலன் காக்க அருள் தரவே வேண்டுமம்மா
துணையாகவிருந் தெமது நலன் காத்து என்றும்
உடனிருந்து வலுதரவே எழுந்து நீ வாருமம்மா
புத்தளம் மாவட்டத்தில் எழுந்துறையும் காளியம்மா
பேதலிக்கும் நிலையகற்றி மனவுறுதி தரவேண்டுமம்மா
பயங்கள் தரும் தீயநிலையகற்றி என்றும் 
மனவுறுதி தந்தருள எழுந்து நீ வாருமம்மா
உடப்பு தமிழ் திருநிலத்திலிருந்து காப்பளிக்கும் காளியம்மா
உண்மையென்றும் வென்றிடவே உன் துணையே வேண்டுமம்மா
வலிமை கொண்டு எழுச்சி பெற்று வாழ்வதற்கு என்றும் 
நிலை குலையா நிம்மதியைத் தந்தருள எழுந்து நீ வாருமம்மா
கடலலையின் ஓசையுடன் எழுந்து நிற்கும் காளியம்மா
கவலையின்றி நாம் வாழ வழி தரவே வேண்டுமம்மா
குவலயத்தில் குதூகலமாய் நிம்மதியாய் வாழ என்றும் 
குறைவில்லா நிறைவினைத் தந்தருள எழுந்து நீ வாருமம்மா
கொடுநோய்கள் அண்டாத நிலையைத் தரும் காளியம்மா
சுகங் கொண்டு வாழ நல்ல அருள் தரவே வேண்டுமம்மா
உடல் நலமும், உள நலமும் சீராக இருக்க என்றும் 
கருணை செய்து கருணையினைத் தந்தருள எழுந்து நீ வாருமம்மா
வேப்பிலைக் கும்பத்தில் எழுந்தருளும் காளியம்மா
வீண்பகைமை அண்டாத வாழ்வு தர வேண்டுமம்மா
வேள்வி விழா கொண்டாடும் தாயே நீ என்றும் 
வீணர்களின் கொட்டமதை அடக்கி யெம்மைக் காக்க எழுந்து நீ வாருமம்மா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen