...
செய்திகள்

புத்தளம் அருள்மிகு ருக்மணிசத்தியபாமா சமேத பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதை அம்மன் திருக்கோயில் ..

மேற்கிலங்கை கடலோரம் கோயில் கொண்ட தாயே
மேன்மை கொண்டு நம்வாழ்வு அடைந்திடவே அருள்வாய்
பார் புகழும் பார்த்த சாரதியின் அருள் பெற்ற தாயே
தீய பகை வஞ்சனைகள் அழித்திடவே நீயெழுந்து வருவாய்
புத்தளம் பெருநிலத்தில் வீற்றிருக்கும் தாயே
பரிதவித்து, நிலை குலையும் வாழ்க்கை நிலை தடுத்தருள்வாய்
நம் உரிமைகளை மீட்டெடுக்க உதவிடுவாய் தாயே
உண்மைதனை நிலைநிறுத்த நீயெழுந்து வருவாய்
அன்னையர் ருக்மணி சத்திய பாமாவுடன் உறையும் தாயே
அவர்களது ஆசியையும் எமக்கருளச் செய்வாய்
அண்டவரும் தீமைகளைத் தடுத்தருள்வாய் தாயே
என்றும் எம்முடனிருந்து காத்திடவே நீயெழுந்து வருவாய்
ஆண்டிலிரு திருவிழாக்கள் காணுகின்ற தாயே
அருள் பொழிந்து மகிழ்ச்சி பொங்க திருவருளைத் தருவாய்
பாரதப் போர் வரலாற்றை வெளிப்படுத்தி விழாக்காணும் தாயே
உரிய வளம் அடைந்திடவே உறுதி செய்ய நீயெழுந்து வருவாய்
தீமைகளும், வஞ்சனையும் துடைத்தெறிய வீறுகொண்ட தாயே
கால வெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் தடுத்தெம்மைக் காப்பாய்
உரிமைகளைப் பறித்தழிக்கும் பெருங் கொடுமை அழித்து
வீறுகொண்டு எமைக் காக்க விரைவாக நீயெழுந்து வருவாய்
தீமிதிப்பை ஏற்றருளும் திருமகளே தாயே
தீய செயல், சிந்தனைகள் அணுகா நிலையெமக் கருள்வாய்
பார்த்த சாரதியின் துணையுடனே பாரில் நாம் நலம் பெறவே
காத்தருளும் கருணை கொண்டு நீயெழுந்து வருவாய்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen