செய்திகள்

புத்தளம் எரிவாயு ஆலையில் வெடி விபத்து : இருவர் வைத்தியசாலையில் அனுமதி

புத்தளம் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நைனாமடம பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.குறித்த சம்பவம் நேற்று (30) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைப் புதுப்பிக்கும் இடத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதே வெடிப்பு ஏற்பட்டுள்ளமையால் குறித்த இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.குளிரூட்டலுக்கு பயன்படுத்தப்படும் 5 அடி உயர நைட்ரஜன் அடங்கிய சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த குழாய்  இவ்வாறு வெடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Related Articles

Back to top button