...
செய்திகள்

புத்தளம்- சிலாபம் அருள்மிகு அன்னை வடிவாம்பிகை சமேத முன்னேஸ்வரப் பெருமான் திருக்கோயில் 

தில்லையிலே ஆடுகின்ற பேரருளே சிவனே 
திருவருளை நாடுகின்றோம் அருள் தருவாய் ஐயா 
வல்வினைகள் போக்கியெம்மை காத்தருளும் சிவனே
வரந்தந்து எங்களை நீ வாழவைப்பாய் ஐயா
நாடிவந்துன் பாதம் சரணடைந்தோம் சிவனே 
நல்லருளை வழங்கியெமைக் காத்தருள்வாய் ஐயா 
பாடித்துதித்துன் பாதம் போற்றுகின்றோம் சிவனே 
பார்த்து அருள் வழங்கியெமை ஆதரிப்பாய் ஐயா 
பூவுலகில் எமக்குத்துணை நீயன்றோ சிவனே 
 பூமகளின் மைந்தரெம்மை அணைத்தருள்வாய் ஐயா
மூவுலகும் ஆளுகின்ற மூத்தவனே சிவனே
மூண்டுவரும் துன்பங்களைத் துடைத்தெறிவாய் ஐயா
 வேதங்கள் போற்றுகின்ற மெய்ப் பொருளே சிவனே 
வேதனைகள் களைந்திடவே வந்திடுவாய் ஐயா 
பேதலித்து நிற்பவர்க்கு வழிகாட்டும் சிவனே 
பேதமைகள் போக்கியெம்மைக் காத்தருள்வாய் ஐயா 
அன்னை வடிவாம்பிகையுடன் இருந்தருளும் சிவனே 
இரவு பகல் என்றும் துணையிருப்பாய் ஐயா 
மறமழித்து அறங்காத்து அருளுகின்ற சிவனே 
வலிமை கொண்ட மனநிலையைத் தந்திடுவாய் ஐயா 
முன்னேஸ்வரத் திருத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே
சிந்தையிலே யுனையிருத்திப் போற்றுகின்றோம் ஐயா 
நலஞ் சூழ வாழ்வு சிறக்க வாழவைக்க வேண்டும் சிவனே 
நம்பியுன்னடி தொழுது நிற்கும் எங்களை அணைத்தருள்வாய் ஐயா. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen