புத்தளம், நாகவில்லு பகுதியில் கோர விபத்து நான்கு பேர் உயிரிழப்பு ,,?

புத்தளம், நாகவில்லு பகுதியில் இன்று அதிகாலை கோர விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மேலும் படுகாயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவாவது ,யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற வேன் ஒன்றுடன், எதிர்த் திசையில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த குறித்த வேன் நாகவில்லு பகுதியில் உள்ள இரவு ஹோட்டலில் நிறுத்தி விட்டு, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் குறித்த வேனில் பயணித்த சாரதி உட்பட பத்து பேருடன், வீதியோரத்தில் நின்ற மற்றுமொரு லொறியின் சாரதியொருவரும் பாடுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் வேனில் பயணித்த கற்ப்பிணத் தாய் உட்பட மூன்று பெண்களும், வீதியோரத்தில் நின்ற லொறியின் சாரதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எழுவரில் ஆண்கள் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்களும், சிறுமி ஒருவரும் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான வேன் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், டிப்பர் வாகனமும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.