...
செய்திகள்

புத்தளம்- நாத்தாண்டிய- வலஹாப்பிட்டி வீதி அருள்மிகு ஐயனார் திருக்கோயில்

 
காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனாரே
கவலையின்றி நாம் வாழவுன் காப்பு தேவையைய்யா
வந்த துன்பம் போக்கிவிட வரும் துன்பம் தடுத்துவிட
புத்தளம் மாவட்டத்திலுறை ஐயனாரே அருள்புரிவாய்
ஊர்காத்து, நலங்காத்து உயர்வளிக்கும் ஐயனாரே
உற்றவரின் ஊரவரின் நலன் பேணவுன் கருணை தேவையைய்யா
தீயபகை கொடுமையெமையண்டாதிருந்துவிட
நாத்தாண்டியவில் வீற்றருளும் ஐயனாரே அருள்புரிவாய்
வலஹாப்பிட்டி வீதி மருங்கில் கோயில் கொண்ட ஐயனாரே
நம்வாழ்வு அமைதியுறவுன் துணையே தேவையைய்யா
வருத்தும் துன்பம், நோய்கள் எம்மையண்டா திருந்துவிட
வந்தெமக்கு உடனிருந்து ஐயனாரே அருள்புரிவாய்
சிவன் திருமால் அம்சமுடன் தோற்றம் பெற்ற ஐயனாரே 
சீராக வாழ்வமையவுன் பார்வை தேவையைய்யா
சொந்த மண்ணில் நிம்மதியாய் நிரந்தரமாய் வாழ்ந்துவிட
உற்றதுணைதந்தெமக்கு ஐயனாரே அருள்புரிவாய்
வயல் நிலங்கள், கடலோரம் மலைகளென்றுறையும் ஐயனாரே
வளமாக நாம் வாழ உன்னாசி தேவையைய்யா
வாழ நல்ல வழிகாட்டி எம்வாழ்வு உயர்ந்துவிட
வாழ்த்தி எம்மை வாழச்செய்து ஐயனாரே அருள்புரிவாய்
பழந்தமிழர் வழிபாட்டில் இடம் பெற்ற ஐயனாரே
பதற்றமின்றி நாம் வாழ உன்னருளே தேவையைய்யா
பார்போற்ற நாமுயர்ந்து வலிமையுடன் வாழ்ந்துவிட
ஏற்ற நலனளித்து மேன்மையுற ஐயனாரே அருள்புரிவாய்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen