செய்திகள்

புத்தளம் மதுரங்குளியில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்..

புத்தளம் மதுரங்குளி நகரில் அமைந்துள்ள மர ஆலையில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேற்றிரவு மர ஆலையில் திடீரென தீ பரவியுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீயினால் மர ஆலை முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button