...
செய்திகள்

புத்தளம்- மாதம்பை- அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் முருகன் திருக்கோயில் 

நம்பிவரும் அடியவர்கள் நலன் காக்கும் முருகனவன்
மாதம்பை திருவிடத்தில் வந்தமர்ந்தான் அருள்வழங்க
கேட்டவரம் தந்தருளும் சிவனாரின் இளையமகன்
வெற்றி நிறை பெருவாழ்வை எமக்கருள்வான் உறுதி கொள்வோம்
கலியுகவரதன் என்ற பெயர் கொண்ட முருகனவன்
காத்தருள வந்தமர்ந்தான் நம்மையென்றும் காவல் செய்ய
புத்துணர்வு தந்து பொலிவடையச் செய்திடுவான்
வீரவேல் தாங்கி நின்று எமைக்காப்பான் உறுதி கொள்வோம் 
புத்தளப் பெருநிலத்தில் கோயில் கொண்ட முருகனவன்
களங்கமில்லா பெருவாழ்வை நாமடைய வழியமைப்பான்
தெளிவான பாதையிலே நாம் நடக்க வழிகாட்டி 
துணையிருந்து காத்திடுவான் திடமாக உறுதி கொள்வோம் 
துட்டர்களின் கொட்டமதை அடக்கி விட அவதரிக்கும் முருகனவன்
கிட்ட வரும் கொடிய பகை, தீமைகளைத் தடுத்திடுவான்
எட்டுத்திக்கும் அவனாட்சி நின்று நிலைத்துவிட்டால்
என்றுமே துன்பமில்லை என்பதில் நாம் உறுதி கொள்வோம் 
ஆறுதிருமுகங்கள் கொண்டு அருளுகின்ற முருகனவன் 
ஆறுதலைத் தந்தெமது அமைதி நிலை பேணிடுவான்
அச்சமின்றி வாழும் நிலை நமக்குரிய தாக்கிவிட்டு
அனுதினமும் காத்தருள்வான் தெளிவாக உறுதிகொள்வோம்
அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் முருகனவன்
வாழ்விலே ஒளியேற்றிவளம் பெருகச் செய்திடுவான்
சூரனின் கொட்டமதையடக்கியருள் செய்ததுபோல்
நம்பித்தொழும் நமது துயர் துடைத்தெறிவான் உறுதி கொள்வோம்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen