...
செய்திகள்

புத்தளம்- மானாவாரி அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயில் ..

அருள் பொழியும் திருவிடத்தில் அமர்ந்தருளும் சிவனே
ஆட்சி செய்வாய், அரவணைப்பாய் நிம்மதியும்தான் தருவாய்
மேற்கிலங்கை கோயில் கொண்ட மூலவனே ஐயா
மேதினியில் அமைதியினை நிறுவிடவே வருவாய்
புத்தளப் பெருநிலத்தில் வீற்றிருக்கும் சிவனே
புத்துணர்வு தந்தெம்மை எழுச்சியுறச் செய்வாய்
நம்பி வந்து உன்னடியைப் பற்றுகின்றோம் ஐயா
நாட்டினிலே நல்லுறவை நிறுவிடவே வருவாய்
இராமபிரான் பூசையிலே பெருமை பெற்ற சிவனே
இதயமதில் இருந்தெமக்கு உறுதிதர வருவாய்
ஆதிசிவன் உன்னை நம்பி அணைக்கின்றோம் ஐயா
ஆறுதலைத் தந்தெமக்கு நலம் தரவே வருவாய்
இராமலிங்க சுவாமியென்ற பெயர் கொண்ட சிவனே
இன்பம் உறை மனநிலையில் திளைக்க வரம் தருவாய்
சஞ்சலங்கள் போக்கியெமக்கருள வேண்டும் ஐயா 
சாந்தியுடன், நிம்மதியும் தந்திடவே வருவாய்
தக்கனின் ஆணவத்தை அழித்திட்ட சிவனே
தன்னலமில்லா மனவெழுச்சி எமக்கு நீ தருவாய்
தேடிவந்து உன்னடியைச் சரண் அடைந்தோம் ஐயா
தொய்வில்லா மனநிலையை எமக்களிக்க வருவாய்
வானரர்கள் புடைசூழ அருள் வழங்கும் சிவனே
வாட்டமில்லா பெருவாழ்வை உறுதி செய்தே அருள்வாய்
பார்வதியை அருகு கொண்டு அருள் பொழியும் ஐயா
பாரினிலே தமிழ் முழங்க உடனிருக்க வருவாய்.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen