...
செய்திகள்

புத்தள-நீராடச் சென்ற இளைஞர்கள் மூவர் பலி..

புத்தள பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கட்டுகஹல் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர்கள் மூவர் சடலமாக இன்று (15) மீட்கப்பட்டனர். 
18 வயதுடைய இரண்டு பேர் மற்றும் 19 வயதுடைய ஒருவருமே  இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். 
நேற்றைய தினம்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிய நிலையிலே அவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen