செய்திகள்

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் பரிமாற்றம்..

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்கள் பரிமாற்றம் இடம்பெறக்கூடும் என்பதனால் இது தொடர்பாக மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான போலி நாணயத்தாள்கள் உங்கள் கைகளில் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 1000 ரூபா போலி நாணயமொன்றை கையில் வைத்திருந்த 28 வயதுடைய நபரொருவர் நேற்றைய தினம் (7) பனாகொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் 1000 ரூபா போலி நாணயத் தாள் ஒன்றை கடையில் கொடுத்து பொருட்களை வாங்க முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தப் புத்தாண்டு காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்ளவும் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மேலும் இந்த இரண்டு காரணங்களையும் கருத்திற்கொண்டு செயற்படாவிடின் இம்முறை புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக கொண்டாட முடியாமல் போய்விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button