Breaking Newsஆன்மீகம்உலகம்சிறப்புசெய்திகள்

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள வெளிநாட்டவர்களுக்கு தடை.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாட்டவருக்கு இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்படமாட்டாது என சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அந் நாட்டில் தங்கியுள்ளவர்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானோருக்கும் அரேபிய நாட்டவருக்கும் மட்டுமே ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேருக்கு மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்’ இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவுதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.

ஹஜ் புனிதப் யாத்திரை இந்த ஆண்டு ரத்து இல்லை, அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பயணிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள். உள்நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள் மட்டுமே குறைந்த அளவில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download