சிறப்புமலையகம்

புப்புரஸ்ஸவை சேர்ந்த இளம் திறமைமிக்க மர செதுக்கும் கலைஞரை ஊக்குவிக்கும் முகமாக பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு ..

கனடாவைச் சேர்ந்த Dr.நரேந்திரா விவேகானந்தா அவர்களின் நன்கொடையில் இன்று (4/4/2021) புப்புரஸ்ஸவை சேர்ந்த எஸ். மகேந்திரன் (கண்ணா ) இளம் திறமைமிக்க மர செதுக்கும் கலைஞர்க்கு 28,000/- பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த உதவியை சிரேஷ்ட ஊடகவியலாளர் தினேஸ் கனகராஜ் மற்றும் மஸ்கெலியா வடிவேல் ரமேஷ் ஊடாக கையளிக்கப்பட்டது.

கண்ணா என்று அழைக்கப்படுகின்ற எஸ் மகேந்திரனை மலையகம் .lk முதல் முதலாக நேரலை கண்டது என்பது குறிப்பிடத்தது.

https://www.facebook.com/watch/live/?v=662630477974968&ref=watch_permalink

அதே வேளை மஸ்கெலியா ஷெலோன் தோட்டத்தை சேர்ந்த எஸ். கோகிலம்மா எனும் தோட்ட தொழிளாளருக்கு 24,000/- பெறுமதியான 30 நாட்டு கோழி குஞ்சுகளும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டன.

இது போன்ற சிறு தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு உதவி செய்த Dr.நரேந்திரா அவர்களுக்கு மலையகம் சார்பான நன்றிகள்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com