அரசியல்செய்திகள்

புர்காவைத் தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

புர்காவைத் தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் இன்று கையளித்துள்ள நிலையில்,அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலை அடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button