உலகம்விளையாட்டு

புற்று நோயுடன் போராடி மீண்ட இயன் சாப்பல்: ஆஷஸ் தொடரில் வர்ணனை செய்யப்போவதாகவும் நம்பிக்கை.

1964 தொடக்கம் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரமாக திகழ்ந்தவர் இயன் செப்பல்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான இயன் செப்பல் அவ்வணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி , இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரமாக ஒரு கட்டத்தில் திகழ்ந்த இயன் செப்பல் , திடிரென ஓய்வை அறிவித்து , வர்ணனையாளராக களமிறங்கினார்.

எவ்வாறாயினும் இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்கு பின்னர் இயன் செப்பல் சரும புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு கதிரியக்கச் சிகிச்சையில் 5 வாரங்கள் போராடி மீண்டுள்ளார்.

கிரிக்கெட்டின் மீது கொண்ட அதீத ஆர்வத்தாலும் அதன் மீது கொண்ட காதலாலும் மீண்டும் வர்ணனையாளராக சாதிக்க முடியும் என இயன் செப்பல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆசஷ் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக களமிறங்கவுள்ளதாகவும் இயன் செப்பல் கூறியுள்ளார்

இயன் செப்பலின் தற்போதைய வயது 75 என்பதும் குறிப்பிடத்தக்கது.

70 வதை கடந்து விட்டாலே உடல் பலவீனமடையும் என்பதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைந்து விடும். ஆனால் சில ஆண்டுகளாகவே இதனுடன் நான் வாழப்பழகிக் கொண்டேன். எனவே என்னால் மீண்டும் வர்ணனையாளராக சாதிக்க முடியும் என இயன் செப்பல் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் அரங்கில் மாஸ்டர் பிளாஸ்டரான சச்சின் டென்டுல்கர் , இந்திய அணியின் சுவரான ராகுல் டிராவிட் , அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திரம் ரிக்கி பொன்டிங் ஆகியோர் விளையாடும் போது , இயன் செப்பல் பல சந்தர்ப்பங்களில் வர்ணனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button