கல்விசெய்திகள்

புலமைப்பரிசில் ,உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் தினங்களின் மாற்றம்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட தினங்களில் பரீட்சைகள் இடம்பெறாது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சைகள் தொடர்பில் மீள் ஆராய்வு செய்த பின்னர் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் பாடசாலைகளின் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க கல்வியமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button