கல்விசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளைக் குறைக்கும் சாத்தியம் பற்றி பரிசீலனை …

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப் புள்ளிகளை குறைக்கும் சாத்தியம் பற்றி எதிர்காலத்தில் ஆராயப் போவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

வெட்டுப் புள்ளிகளைக் குறைத்து பிள்ளைகளுக்கு சலுகை வழங்குமாறு பெற்றோர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்திருந்தனர்.
இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்டன. வெட்டுப்புள்ளிகள் அதிகமாக இருப்பதால் பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பெற்றோர் ஜனாதிபதி செயலகத்தில் முறையிட்டிருந்தனர்.

வெட்டுப்புள்ளிகளை குறைக்கையில், பிரபல பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதனால் எழக்கூடிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காக வகுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க நேரிடலாம். பௌதீக ஆளணி வள சவால்களுக்கு மத்தியில் இது சிக்கலான விடயம் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button