கல்விசெய்திகள்

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் வெளியாகின

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியும், உயர்தரப்பரீட்சைகள் ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னர் பாடசாலைகளின் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க கல்வியமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button