மலையகம்

புலமை பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா!!

லிந்துலை சென்றெகுலர்ஸ் த .வி பழையமாணவர்களால் கடந்த வருடம் புலமை பரிசில் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

 

குறித்த பாராட்டு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் 16/01/2019 அன்று நண்பகல் 01.30மணிக்கு  நு.சென்றெகுலர்ஸ் பாடசாலையில் ஆரம்பமானது.

இந்த பாராட்டுவிழாவில் நுவரேலியா மாவட்டம் கோட்டம் 01ஐ சேர்ந்த கல்வி அதிகாரிகளான வடிவேல் மற்றும் பிரங்ளின் உட்பட லிந்துலை பகுதியில் உள்ள ஏனைய பாடசாலை அதிபர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த பாராட்டு விழாவில் கௌரவிக்கப்பட்ட மாணவி விநாயக மூர்த்தி துர்கா 15 வருடங்களுக்கு பிறகு 169 புள்ளிகளை பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளதோடு ,2018இல் இந்த பாடசாலையில் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அத்தனை மாணவர்களும் நல்ல புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளனர்.

அதே போல குறித்த பாராட்டு விழாவில் தோட்டத்திலிருந்து இவ்வருடம் பல்கலை கழகத்துக்கு தெரிவாக உள்ள மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் புலமை பரிசில் ப்ரீட்சைக்கு அயராது உழைத்த அதிபர் உட்பட ஆசிரியர்களும் இதன் போது பழையமாணவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com