கல்விபதுளைமலையகம்

புலமை பரீட்சையில் பதுளை கனவரல்ல இல.01 தமிழ் வித்தியாலயத்தில் ஐந்து மாணவர்கள் சித்தி.

2019 ஆம் ஆண்டுக்கான புலமை பரீட்சையில் பதுளை கனவரல்ல இல.01 தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும்
ஐந்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதற்கமைய வி.பிரதீப் 170 புள்ளிகளையும், எஸ்.சதுர்ஸிகா 166 புள்ளிகளையும், எஸ்.கேசவரூபன் 163 புள்ளிகளையும், பீ.கவிசா செவ்வந்தி 156 புள்ளிகளையும்மற்றும் எம்.டினோஜினி 155 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

கனவரல்ல பாடசாலையில் புலமை பரீட்சையில் பரீட்சைக்கு பொறுப்பாக எல்.கனிசுதார் ஆசிரியை
செயற்படுவதுடன் பகுதித் தலைவராக ஆசிரியை பி.அழகுராணி செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை பாடசாலை அதிபராக பதவி வகிக்கும் டி.காந்தீபன் இந்த பரீட்சை பெறுபேறு குறித்து
கூறும் போது இது ஒரு வரலாற்று சாதனை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மலையகத்தில் பின்தங்கிய தோட்டமாக கனவரல்ல காணப்படுவதாகவும் இங்குள்ள மக்கள்
மிகவும் சிரமத்திற்கும், வறுமைக்கு மத்தியிலும் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தனது பாடசாலை கல்வி மற்றும் இதர செயற்பாடுகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
image download