செய்திகள்

புலிகளின் நடமாட்டம்- புத்தள கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்துபவர்கள் அவதானம்..

புலிகளின் நடமாட்டம் காணப்படுவதால், புத்தள கதிர்காமம் பிரதான வீதியை பயன்படுத்துபவர்கள், அவதானமாக செயற்படுமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் நடமாடும் புலியொன்று தாக்கியதில் கடந்த காலங்களில் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீதி, யால சரணாலயத்தின் 3, 4, மற்றும் 5 ஆகிய வலயங்களை அண்மித்த பகுதிகள் ஊடாக அமைந்துள்ளதால், விலங்குகள் அப்பகுதிகளில் நடமாடுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் புலிகளின் நடமாட்டத்தினால், பயணிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை குறைப்பதற்கு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

புலிகள் தாக்கியதில் இதுவரை 4 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download