செய்திகள்நுவரெலியாமலையகம்

புஸல்லாவை, புரட்டொப்பில் பேருந்தொன்று விபத்து!

புஸல்லாவையில் இருந்து புரட்டொப் சென்று திரும்பிய தனியார் பேருந்தொன்று இன்று மாலை 5.30 மனியளவில் மேரிஹில் எனும் இடத்தில் விபத்துக்குள்ளானது.

பாலத்துக்கு அருகாமையில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானாலும் தெய்வாதீனமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

புஸல்லாவை, புரட்டொப் வீதியை புனரமைத்து தருமாறு 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download