செய்திகள்

புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 8 நாட்களேயான பச்சிளம் குழந்தை கொரோனாவால் பலி

பிறந்து 8 நாட்கள் வயதுடைய குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட நிமோனியாவால் உயிரிழந்துள்ளது.

கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பான தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவான இளம் வயது கொரோனா மரணமாக இது கருதப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.

கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த அந்த குழந்தை வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அந்த குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com