கண்டிகல்விமலையகம்

புஸ்ஸல்லாவ-மாணவியின் கனவு நனவாகியது..?

வாழ்கையில் “கனவு கானுங்கள்”  என இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறிதில் உண்மை இருக்கின்றது என நிரூபித்துள்ளார் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற உயர்தர மாணவி ஜி.வேதராகினி.


மாணவி ஜி.வேதராகினி தனது கல்லூரியில் கல்வி பயிலும் போது தான் ஒரு சட்டதரணியாக வர வேண்டும் என கனவு கண்டார்.

தான்  கல்வி கற்றும் போதே தான் ஒரு சட்டதரணி என எண்ணிக் கொண்டார். தனது புத்தகங்களிலும் அப்பியாச கொப்பிகளிலும் தனது கனவு நனவாகும் என எழுதிக் கொண்டதோடு. தனக்கான சட்டதரணி முத்திரையும் பதித்துக் கொண்டார்.

இதன் பயனாகவும் கனவின் நனவாகவும் அன்மையில் வெளி வந்த உயர்தர பெறுபேற்றில் சிறந்த பெறுபேற்றை பெற்று யாழ்ப்பாணம் பல்கலைகழக சட்ட பீடத்திற்கு தெரிவாகி உள்ளார். உண்மையாகவே இது சாதனை தான்;. இவரின் திறமைக்கும் முயற்சிக்கும் பாடசாலையின் சமூகம் உட்பட பாடசாலையின் நிர்வாகம் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழைய மாணவ சங்கத்தினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக இந்த மாணவியின் பெற்றோருக்கும் உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அன்பார்ந்த மலையக மாணவர்களே கனவு கானுங்கள் உங்கள் வாழ்க்கை மேன்மை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதற்கு இந்த மாணவியின் கனவு ஒர் சிறந்த உதாரணமாகும். ஆகவே “கனவு கானுங்கள்”

பா.திருஞானம் 

Related Articles

Back to top button