உலகம்

பூகோள காலநிலை மாற்றம்

பூகோள காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி பிரள்வடைவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுள் முதல் தடைவாயக உலகின் காபன் டயொக்சைட்டின் அளவு அதிகரித்துள்ளது.

2017ம் ஆண்டு ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி ஒரு முக்கியக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியத்துவம் காரணமாக பல நாடுகள் காபர்ன் கட்டுப்பாட்டை புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.

2020ம் ஆண்டாகும் போது பூகோள காலநிலை மாற்றம் மிகவும் உச்சகட்டமாக அமையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையின் இலக்குகளை அடைவதென்பது, 2030ம் ஆண்டளவில் கூட சாத்தியம் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

போலாந்தில் அடுத்தமாதம் 2ம் திகதி முதல் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு ஆரம்பமாகின்ற சூழ்நிலையில் இந்த அறிக்கை வெளியாக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button