செய்திகள்மலையகம்

பூண்டுலோயா-கோழி திருடர்கள் சிக்கினர் ..?

நூதன முறையில் காரில் கோழி திருடியவர்களை பூண்டுலோயா பொலிசார் இன்று அடையாளம் கண்டுள்ளனர்.

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ தோட்டத்தில் கடந்த மாதம் 40 கோழிகள் காணமல் போனதை அடுத்து , குறித்த கோழிவளர்ப்பாளர்கள் பூண்டுலோயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் , பல நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் குறித்த 40 கோழிகளில் 14 கோழிகளையும் 2 கோழிகுஞ்சுகளையும் மீட்டுள்ளனர்.

கந்தப்பளை பகுதியில் வைத்தே குறித்த கோழிகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அனைத்து கோழிகளும் எவருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் காரில் கடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.

மேலும் இக்கடத்தலோடு தொடர்புடைய 3 சந்தேக நபர்களை கைது செய்ய எத்தணித்துள்ளதாகவும் நாளைய தினம் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும் பூண்டுலோயா பொலிசார் தெரிவித்தனர்.

நீலமேகம் பிரசாத்..

Related Articles

Back to top button
image download