செய்திகள்

பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் கூரிய ஆயூதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்னொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது…

லயன் குடியிருப்பு ஒன்றில் இருந்து கூரிய ஆயூதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்னொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இன்று (29) காலை குறித்த சடலத்தை மீட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் பெயர் பீ.மாலா என அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட தகறாரே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரும்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்Nதுகத்தில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்படும் போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் தெரிவித்தனர்.
சுடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button