பூண்டுலோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று(19) காலை 06 மணியளவில் சிறிய ரக லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்து கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில், தலவாக்கலை பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள், பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக லொறி என்பன இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி, அவருடன் பயணித்த மற்றுமொருவர் மற்றும் லொறியின் சாரதி ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டர் சைக்களின் சாரதிக்கு மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்றப்பட்டதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.