செய்திகள்
பூனாகலை வீதியில் மண்மேடு சரிவு

பதுளை – பண்டாரவளை பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், பண்டாரவளை பூனாகலை வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் பூனாகலை வீதியூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண் மேடுகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றதுடன், பூனாகலை வீதியூடாக பயணிக்கும் வாகன சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.