நிகழ்வுகள்பதுளை

பெரட்டுகளத்தில்’ நடைபெற்ற ஊவாக்கலை தமிழ் வித்தியாலய அதிபரின் பிரியாவிடை நிகழ்வு…

மடுல்சீமை-ஊவாக்கலை தமிழ் வித்தியாலயத்திலிருந்து அதிபர் முத்துக்குமார் விடைபெற்று சென்றதையடுத்து ஊவாக்கலை தோட்டமக்கள் அதிபர் முத்துகுமார் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு ஒன்றை நேற்று (30/12)ஏற்பாடு செய்து இருந்தனர்.


பொதுவாக அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று செல்லும்போது பாடசாலைகளில் சேவைநலன் பாராட்டி இவ்வாறான பிரியாவிடை நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாகவிருப்பினும் ஊவாக்கலை தோட்ட பெரட்டுகளத்தில் தோட்டமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, தோட்ட முகாமைத்துவ அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர், கங்காணிமார், தொழிலாளர்கள் என அனைவரினதும் வருகையோடு தம் பிரதேச பாடசாலையில் அர்ப்பணிமிக்க சேவையால்
மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்தியதோடு, பாடசாலை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய
அதிபரை கௌரவித்த மடுல்சீமை – ஊவாக்கலை மக்களுடைய இந்த செயற்பாடு அனைவரையும் வியக்க வைத்தது.

வெறுமனே பெரட்டுகளத்தில் கட்சிக்கூட்டங்கள் நடாத்துவோர் மத்தியில் அதிபருக்கு பாராட்டு நிகழ்வை நடாத்திய இம்மக்கள் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் வேலையையும் செய்துகொண்டு கொழுந்து நிறுத்திவிட்டு, தொழிலாளர்கள் ஒன்றுகூடி நிகழ்வை நடாத்தியிருந்தார்கள். அதிபரின் மகத்தான சேவையைப் போற்றி
பாராட்டியதோடு கண்ணீர்மல்க விடைகொடுத்து அனுப்பினார்கள்.


இதன் அதிபர் முத்துக்குமார் ஊவாக்கலை தோட்ட மக்களின் அளவில்லா அன்புக்கு தலைவணங்கி நன்றிகூறி விடைபெற்றார்.

இவ்வாறான சேவையாளர்களும் சமூகமும் இருக்கும்வரை நம் மலையகம் உயிர்ப்புடன் உயர்வுபெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அண்மையில் ஊவாக்கலை தமிழ் வித்தியாலய அதிபர் முத்துகுமார் அவர்கள் இடமாற்ற உயர்வு பெற்று மடுல்சீமை தமிழ் மகா வித்துயாலயத்திற்கு பசறை கல்வி வலய கல்விப்பணிப்பாளரால் நியமிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. அதிபர் முத்துகுமார் அவர்களின் சேவை இனிதே தொடரவேண்டுமென கல்வி சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button