விளையாட்டு

பெரிஸ் செய்ன்ட் ஜெர்மெய்ன் கழகத்துடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையொப்பம்

21 ஆண்டுகளின் பின்னர் பார்ஸிலோனா கால்பந்து கழகத்தில் இருந்து வெளியேறிய லியோனல் மெஸ்ஸி, பெரிஸ் செய்ன்ட் ஜெ(ர்)மெய்ன் (Paris Saint-Germain) கழகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

ப்ரான்ஸ் கழகம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலதிகமாக ஒரு ஆண்டுக்கான விருப்பத்தெரிவும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்ஸிலோனா கழகத்துக்காக 10 ஆம் இலக்க சீருடையுடன்  விளையாடிய லியோனல் மெஸ்ஸி, பெரிஸ் செய்ன்ட் ஜெ(ர்)மெய்ன் கழகத்திற்காக 30 ஆம் இலக்க சீருடையுடன் விளையாட உள்ளார்.

இந்த ஒப்பந்தமானது, ஒரு பருவத்திற்கு 34.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற அடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு 104 மில்லியன் டொலர்கள் வேதனத்துடன் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பு மூலம் இந்த ஒப்பந்தம் குறித்த அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download