பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் திலகராஜ், அரவிந்த் குமார் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னைய கோரிக்கையின்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தற்காலிக தீர்வாக அரசாங்கத் தரப்பில் நாட்சம்பளத்துக்கு ஒரு தொகை பங்களிப்பினை செய்வதற்கும் ஒரு வருட காலத்திற்கு உள்ளாக பெருந்தோட்ட துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேற்படி தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்
கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
https://www.facebook.com/malaiyagam.lk/videos/246973706242982/