மலையகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 700ரூபா வழங்க தீர்மானம்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றது.

இந்த நிலையில், அடிப்படை சம்பளம் 600 ரூபாவாகவும், இடைக்கால கொடுப்பனவு 100 ரூபாவாகவும் மொத்த சம்பளம் 700 ரூவாவாக வழங்க கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தீபாவளி முற்பணம் உடனடியாக 10,000 ரூபா வழங்க பிரதமர் பணிப்புரை வித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தோட்ட தொழிலாளர்கள் அடிப்படை சம்பளம் 1000ரூபா அதிகரிப்பட வேண்டும் என கோரி கடந்த சில நாட்களாக போராட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button