மலையகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டம் இன்று பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் உள்ளிட்டத் தரப்பினர் கலந்து கொள்ளதுடன் இதற்கு புதிதாக பதவி ஏற்றுள்ள பெருந்தோட்டத்துறை  இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தலைமை தாங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், அதன் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அவர் குறித்த தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தாமல், பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் இன்றைய பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் பணிபுரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்றைய தினம் தீபாவளி முற்பணம் வழங்கப்பட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

Related Articles

One Comment

  1. Normally I don’t read post on blogs, but I would like to say that this write-up very forced me to try and do so! Your writing style has been surprised me. Thanks, very nice article.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button