மலையகம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன தொடர்பில் பிரதமரை சந்தித்த அமைச்சர்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மலையகத்தில் தொடர்ந்தும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
இந்த நிலையில், கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு காணப்படவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, இது தொடர்பில் கலந்துரையாடி இருப்பதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் பிரதமரை தலையிடுமாறும், அவர்களுக்கான தீபாவளி முற்பணமாக 10, 000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தாம் கோரியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.