அரசியல்மலையகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக 1.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, அரசாங்கத்தினால் இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com