செய்திகள்மலையகம்

பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவுகள் கொடுக்காமையினால் தலவாக்கலையில் போராட்டம்!

பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவை மாத சம்பளத்துடன் இணைத்துக்கொடுக்காமையினால் தலவாக்கலையில் போராட்டம்.

தலவாக்கலை பகுதிக்குட்பட்ட தலவாக்கலை, பேஹம், ட்ரூப், சென்கிளயர் தோட்ட சேவையாளர்கள் இன்றைய தினம் (28/11/2019) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய கொடுப்பனவை மாதசம்பளத்துடன் இணைத்துக் கொடுக்காமையினாலேயே இவ்வாறு பணி பகீஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட சேவையாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதோடு தேயிலை தொழிற்சாலை பணிகள் ,தோட்ட காரியாலய பணிகள்,தோட்ட முன்பள்ளி பணிகள் போன்றன முற்றாக தடைபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இப்போராட்டம் தொடர்பாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் சென்னன் இளையராஜா குறிப்பிடுகின்ற போது இப்பிரச்சனைக்கான தீர்வை உடனடியாக மஸ்கெலியா பிளான்டேஷன் வழங்க வேண்டும் அவ்வாறு வழங்காத பட்சத்தில் காலவரையின்றி இப்போராட்டம் தொடரும் அதுமட்டுமல்லாமல் தோட்ட காரியாலயத்தில் வேலை செய்யும் உத்தியோகத்தர்களும் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளமையால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அறிக்கைகளையும் தயாரிக்க முடியாமல் போய்விடும் எனவே அவர்களும் பாதிக்க வேண்டிய நிலமை ஏற்படும் எனவே காலந்தாழ்த்தாமல் இதற்கான முடிவை பெற்றுக்கொடுக்கும்படி கூறியமை குறிப்பிடத்தக்கது.

-நீலமேகம் பிரசாத்

Related Articles

Back to top button